சிரிக்கமட்டுமல்ல..... #சிந்திக்கவும்கூட - TN SOCIAL SCIENCE

social science Teachers Portal

Friday, September 30, 2016

சிரிக்கமட்டுமல்ல..... #சிந்திக்கவும்கூட


ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். 

அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். 


பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். 

“”அப்பா…அப்பா… ” என்றான் பையன். 

“”என்னடா?” கோபத்துடன் கேட்டார். 

“இந்தக் காட்டாறு எங்கே போகுது?” 

“”நம்ம வீட்டுக்குத்தான என்றார் அப்பா”"

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. 

மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்.

No comments:

Post a Comment