சமூக அறிவியல் கற்பித்தலின் நோக்கங்கள்: - TN SOCIAL SCIENCE

Wednesday, August 31, 2016

சமூக அறிவியல் கற்பித்தலின் நோக்கங்கள்:

 இன்றைய சூழலில் மனிதன் வாழும் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைசெய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களின் மூலம் அறிந்து கொள்ளும் போது கடந்த காலத்தில் நடைபெற்ற வரலாற்றின் நிகழ்வுகளை நினைவுகளில் இட்டுச் செல்கிறது. தனி மனிதன் தன்குடும்பத்தில் சமுதாய உறவை துவங்குகின்றான். தான் தன் குடும்பத்தில் மட்டுமல்ல, இந்தச்சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதைச் சிந்திக்கவும்,செயல்படவும், பக்குவப்படுத்தப்படும் கருவியாகவும் மாற்றப்படுகின்றான். இந்த மகத்தானப் பணியை செயலாற்றும் கருவியாக சமூகஅறிவியல் பாடம் அமைந்துள்ளது. ‘தான்’ என்பது நீக்கப்பட ‘நாம்’, ‘நமது சமூகம்’, ‘நமதுவாழுமிடம்’,’நமது நாடு’, என்ற பல்நோக்கு சிந்தனையுடன், தொலை நோக்குப் பார்வையுடன் தமது இயலாமை மற்றும் இன்றியமையாமையை மதிப்பீடு செய்து சமூக விழிப்புணர்வை மீண்டும் கொண்டு வந்து, மக்களாட்சி சமுதாயத்தை நிலைநாட்டி செயல்பட வைக்கிறது. போர், காழ்ப்புணர்வு, பகை, வெறுப்பு தவிர்த்து வேற்றுமையில் ஒற்றுமையாக விளங்க பன்முகக் கலாச்சாரம், சமூகநீதி, ஒற்றுமை, முன்னேற்றம், அமைதி, வளர்ச்சி ஆகியவற்றை உணர்ந்து ஏற்கும் மனப்பக்குவத்தை உருவாக்குவதே சமூக அறிவியலின் உயர்வான நோக்கங்களாகும்.

No comments:

Post a Comment